பூ கருகுதல்: ஃபைட்டோப்தோரா பால்மிவோரா 
சேதத்தின் அறிகுறி: 
              
                - பூவின்  தண்டு  மற்றும்  இதழ்களில்  வெளிர்  பழுப்பு,  ஒழுங்கற்ற,  நீர்  தோய்ந்த  புள்ளிகள்  தோன்றும்.
 
                - புள்ளிகள்  விரைவாக  அதிகரிக்கும்  மற்றும்  அவை  ஒன்றிணைந்து  காயங்கள்  போல்  தோன்றும்.
 
                - ஈரப்பதமான  சூழ்நிலையில்,  தொற்று  கடுமையாக  பூ  முழுவதும்  பரவுகிறது.  இதன்  விளைவாக  பூ  கருகுதல்  மற்றும்  பூ  தண்டும்  அழுகி  விடும்.
 
                - மழை தூறுதல் மற்றும் குளிர்ந்த ஈரப்பதமான வானிலை இந்நோய்கு சாதகமாக அமையும். பூஞ்சை மண் வழியாக பரவும் மற்றும் தொற்று மண்ணின்     அடித் தளத்திலேயே ஆரம்பிக்கும்.
 
               
கட்டுப்படுத்தும் முறை: 
              
                - பயிரிடுவதற்கு நோயற்ற  மண்ணை  பயன்படுத்துவதன் மூலம்  நோய்  தாக்கம்  குறைகிறது.
 
                - பாதிக்கப்பட்ட பூக்களை  சேகரித்து  அழித்துவிட  வேண்டும்.
 
                - அதிகப்படியாக நீர் பாய்ச்சுவதை தவிர்க்கவும்.
 
                 
              | 
              |